Categories
தேசிய செய்திகள்

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்விக்கடன்…. அரசு வங்கி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

குழந்தை செல்வங்களுக்கு கல்விதான் மிக சிறந்த செல்வம் என்று பலரும் கூறுவார்கள். ஆனால் வறுமை காரணமாக இந்தியாவில் நிறைய பேர் கல்வி கற்க முடியாமல் இளம் வயதிலேயே கூலி வேலைக்குச் செல்லும் அவல நிலையில் உள்ளனர். படிக்கும் ஆர்வமும் திறமையும் இருந்தபோதிலும் வசதி இல்லாத காரணத்தால் படிப்பைத் தொடர முடியாமல் நிறைய பேர் தவித்து வருகின்றனர். அதிலும் சிலர் பள்ளி படிப்பை முடித்துவிட்டு உயர்கல்வி பயில பணம் இல்லாமல் தவிக்கின்றனர்.

இந்நிலையில் உயர்கல்வி கற்பதற்கு வங்கிகள் கடன் வழங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உன் மாணவர்களுக்கு சிறப்பு கல்வி கடனை வழங்கி வருகின்றது. அதனைப் பயன்படுத்தி உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் உயர்கல்வி கற்க முடியும். பல்வேறு உயர் படிப்புகளுக்கு எஸ்பிஐ வங்கி இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் கடன் வழங்குகிறது. இந்த கடனை மாணவர்கள் குறைந்த வட்டியில் வாங்கிக் கொள்ளலாம்.

அதிலும் மாணவர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதாவது 7.5 லட்சம் வரையிலான கடனுக்கு கொலேட்ரல் அவசியம் இல்லை. அதனைப்போலவே 20 லட்சம் வரையிலான கடனுக்கு செயல்பாட்டு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் படிப்பை முடித்த ஒரு ஆண்டிற்கு பிறகு கடனை திருப்பி செலுத்தலாம். 15 ஆண்டுகளுக்குள் கடனை திருப்பி செலுத்த அவகாசம் வழங்கப்படுகின்றது. மேலும் உள்நாட்டில் படிப்பதற்கு 50 லட்சம் ரூபாய் வரையிலும், வெளிநாட்டில் படிப்பதற்கு 1.50 கோடி வரையிலும் மாணவர்கள் கடன் வாங்கிக் கொள்ள முடியும். இதற்கான வட்டி விகிதம் 8.5 சதவீதம் மட்டுமே. இதில் மாணவிகளுக்காக 0.50 சதவீத சலுகை வழங்கப்படுகின்றது.

Categories

Tech |