உயர்கல்வி கற்க வங்கிகளில் குறைந்த வட்டியுடன் கல்வி கடன் வழங்கப்படும் என மகிழ்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பெரும்பாலானோருக்கு உயர்கல்வி என்பது மிகப்பெரிய கனவாக உள்ளது. ஏனெனில் கல்வி கட்டணங்கள் அதிகமாக இருப்பதால் வசதி இருப்பவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்று ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் தற்போது சாமானிய மக்களும் உயர் கல்வியை பெற, பல வங்கிகள் உதவி செய்கின்றன. அதாவது குறைந்த வட்டியுடன் கல்விக் கடன்களை வங்கிகள் வழங்குகின்றன. இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடனைப் பொறுத்தவரை அதிகபட்சம் ரூ.50 லட்சம் வரை கடன் கிடைக்குமாறு வழிவகை உள்ளது.
மேலும் வெளிநாடுகளில் சென்று படிப்பதற்கு அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை கடன் பெறலாம் எனவும் கல்வித்தகுதி, பெற்றோரின் வருமானம் மற்றும் கிரெடிட் ஸ்கோர், போன்றவற்றை பொறுத்து கடன் தொகை மாறுபடும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே கல்விக் கடன் வாங்குவதாக இருந்தால் எந்த வங்கிகளில் வட்டி விகிதம் குறைவாக உள்ளது என்பதையும், ஈஎம்ஐ எவ்வளவு செலுத்த வேண்டும் போன்ற விவரங்களை ஒப்பிட்டு வாங்கலாம். உதாரணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளதன்படி, நீங்கள் 7 ஆண்டுகள் வரம்பில் ரூ.20 லட்சம் வரை கடன் வாங்கினால் அதற்கு எவ்வளவு வட்டி என்று இங்கே ஒப்பிட்டு பார்க்கலாம்.
- யூனியன் பேங்க் – 6.80%
- செண்ட்ரல் பேங்க் – 6.85%
- பேங்க் ஆஃப் இந்தியா – 6.85%
- கனரா பேங்க் – 6.90%
- பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா – 6.95%
- இந்தியன் பேங்க் – 7%
- இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் – 7.25%
- யூசிஓ பேங்க் – 7.30%
- ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா – 6.70%
- பேங்க் ஆஃப் பரோடா – 6.75%
- பஞ்சாப் நேஷனல் பேங்க் – 6.75%
- ஐடிபிஐ பேங்க் – 6.75%
- பஞ்சாப் & சிந்த் பேங்க் – 7%
அதாவது ஈஎம்ஐயை பொறுத்தவரையில், ரூ.29,893 தொகையானது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் மற்றும் ரூபாய் 31,172 தொகையானது சௌத் இந்தியன் வங்கியில் செலுத்த வேண்டியது இருக்கும். இதன் மூலம் வங்கிகளில் கல்வி கடன் பெற்று மேற்படிப்பு கனவை நிறைவு செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது.