ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியினர் கலந்து கொள்கின்றனர். இதில் முதல் டி20 ஓவர் போட்டி வரும் 20-ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே மெகாலியில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக முகமது ஷமி டி20 உலக கோப்பை போட்டியில் இருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக டி20 போட்டியில் உமேஷ் யாதவ் விளையாட இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார். அவர் கூறியதாவது, உமேஷ் யாதவ் ஒரு தரமான மற்றும் சிறந்த பந்துவீச்சாளர்.
தன்னுடைய திறமையை பலமுறை நிரூபித்தவர். இந்தத் தொடர் அவருக்கு சிறந்த வாய்ப்பை வழங்கும். உமேஷ் மற்றும் ஷமி போன்றவர்கள் தங்களுடைய திறமையை நிரூபிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட கிரிக்கெட்டில் விளையாட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்களை ஏற்கனவே நிரூபித்துள்ளனர். இதேபோன்று இளம் வீரர்களும் சிறப்பாக விளையாடினால் அவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றார். அதன் பிறகு விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்குவாரா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார். அதற்கு விராட் கோலி 3-வது தொடக்க ஆட்டக்காரர் என்றார். அதன் பிறகு ஆசிய கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி ஆடிய விதம் எங்களை மகிழ்ச்சி அடைய செய்தது என்றும் கூறினார்.