Categories
உலக செய்திகள்

உமிழ்நீரின் மூலம்… கொரோனா பரிசோதனை… அறிமுகம் செய்துள்ள நாடு…!!

சூரிச் விமான நிலையத்தில் உமிழ்நீரிலிருந்து கொரோனா பரிசோதனை செய்யப்படும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

ஸ்விட்சர்லாந்தில் உள்ள சூரிச் விமான நிலையத்தில் உமிழ்நீரின் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் முறை இன்று முதல் அறிமுகமாகியுள்ளது. அதாவது சுவிட்சர்லாந்தில் இருந்து திரும்பும் பயணிகளுக்கு முன்புபோல் மூக்கிலிருந்து மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படாது. இதற்கு பதிலாக பயணிகளின் உமிழ்நீரிலிருந்து பரிசோதனை செய்யப்படும். மேலும் தற்போது நடைமுறையில் இருக்கும் பிசிஆர் சோதனை முடிவுகள் வருவதற்கு சுமார் 24 மணி நேரங்கள் ஆகும்.

இந்நிலையில் இந்த உமிழ் நீரின் மூலம் பரிசோதனை செய்யப்படும் முடிவுகள் சுமார் ஐந்து மணி நேரத்திற்குள் கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இச்சோதனையில் ஈடுபடுவதற்கு மருத்துவத்துறையில் ஊழியர்கள் தேவை இல்லை. அதாவது  பயணிகள் அவர்களாகவே பரிசோதனை செய்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பாகும். மேலும் இந்த பரிசோதனை கிட்டின் விலை 195 சுவிஸ் பிராங்குகள். மேலும் பயணிகள் மாதிரிகளை சேகரிக்கப்பட்டு அவை உடனடியாக அருகில் இருக்கும் ஆய்வகத்திற்கு அனுப்பப்படும்.

அதாவது ஒரு நாளைக்கு நான்கு முறைகள் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பரிசோதனை செய்தவர்களுக்கு அதன் முடிவுகள் அவர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும். மேலும் தினமும் காலையில் 6 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த சோதனைகள் செய்யப்படும். அதன் பின் 5 மணிக்கு மேலாக சேகரிக்கப்படும் மாதிரிகள் அதற்கு அடுத்த நாள் வெளியாகும். இந்தப் பரிசோதனையானது பயணம் செய்பவர்களுக்காகவே தொடங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக விமானத்தின் பயணிகளுக்கு பிசிஆர் சோதனை அவசியம். எனவே இது பெரிதும் உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |