ஆய்வகத்தில் இருந்து மெக்னீசியம் பாஸ்பேட்டை உப்பு என்று நினைத்து சாப்பிட்ட 11 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த மோரணபள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 941 மாணவர்கள் படித்து வருகிறார்கள். அதில் 392 மாணவர்கள் மேல்நிலை கல்வி படிக்கிறார்கள் அவர்களுக்கு ஆய்வக தேர்வு நடைபெற்று வருகின்ற நிலையில், கடந்த 25 ஆம் தேதி அன்று பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் 180 பேருக்கு ஒரே நேரத்தில் தேர்வு நடைபெற்றது.
அதற்கென ஒதுக்கப்பட்ட அறையில் வேதியல் ஆய்வுக்கு பயன்படுத்துகின்ற பாஸ்பேட்டை காகிதத்தில் மடித்து ஜன்னல் ஓரத்தில் வைத்து உள்ளார்கள். இந்த மெக்னீசியம் பாஸ்பேட்டை உப்பு என்று நினைத்து அந்த வழியாக சென்ற ஏழாம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த மாங்காயுடன் சேர்த்து சாப்பிட்டார்கள். இந்நிலையில் சிறிது நேரம் கழித்துப் மாணவர்கள் ஒவ்வொருவராக வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து வாந்தி எடுத்த 11 மாணவர்களையும் ஆசிரியர்கள் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மேலும் மாணவர்களுக்கு தனி படுக்கை ஒதுக்காமல் ஒரே படுக்கையில் 2 முதல் 5 மாணவர்களை படுக்க வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள், காவேரிப்பட்டணம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.