Categories
மாநில செய்திகள்

உபரி ஆசிரியர்களுக்கு பணி மாறுதல்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!

அரசு பள்ளிகளில் உபரியாக பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் இடமாறுதலை மேற்கொள்ள  பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் உபரியாக பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் இடமாறுதலை வருகிற 14-ஆம் தேதி மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது. இது பற்றி முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அனைத்து பள்ளிகளும் கடந்த ஆண்டு ஆகஸ்டு 1ஆம் தேதி மாணவர்கள் எண்ணிக்கை நிலவரப்படி ஆசிரியர்கள் விகிதத்தை முடிவு செய்ய வேண்டும்.

இதன் அடிப்படையில் பாட வாரியாகவும் மாணவர்கள் விகிதத்தின் படி கூடுதலாக பட்டதாரி ஆசிரியர்களை தேவைப்படும் பள்ளிகளுக்கு இடமாறுதல் செய்ய வேண்டும் எனவும் வருகிற ஜூன் மாதம் ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்கள் உபரியான இடத்தில் பணியாற்றினால் அவர்களை பணி மாறுதல் செய்ய வேண்டாம். ஜூன் மாதம் ஓய்வு பெற்றதும் அந்த இடத்தை பள்ளிக்கல்வி கமிஷனர் தொகுப்புக்கு சரண்டர் செய்யப்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |