Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“உன் தலையை துண்டாக எடுத்து விடுவேன்” ரவுடிக்கு நடந்த கொடூர சம்பவம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரை  கொலை செய்த 6  பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளவேடு பகுதியில் ஸ்டீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இன்டர்நெட் வயர் பதிக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஸ்டீபன் தனது நண்பரான ஸ்ரீதர் என்பவருடன்  சேர்ந்து புளியமேடு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 6  பேர் கொண்ட மர்ம கும்பல் ஸ்டீபனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த ஸ்டீபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஸ்டீபனின் சடலத்தை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 4  தனி படைகள் மூலம் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஸ்டீபன் அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற  தலைவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வெளியே வந்த ஸ்டீபன் அதே பகுதியில் வசித்து வரும் எபினேசர்  என்பவர் வீட்டிற்கு சென்று அவரின் தலையை துண்டாக வெட்டி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த எபினேசர் ஸ்டீபனை தீர்த்து கட்ட முடிவு செய்து 6 பேர் கொண்ட  கும்பல் மூலம் ஸ்டீபனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது  தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் தலைமறைவாக உள்ள எபினேசர் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்ளிட்ட 6  பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |