Categories
தேசிய செய்திகள்

உன் உடலை காட்டு…. என்னை தொடுவார்…. அலற விட்ட அதே பிஷப்… புகார் புதுசு …!!

கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்புணர்வு புகாரில் சிக்கிய பாதிரியார் ஃபிராங்கோ முல்லக்கல் மீது மற்றொரு பாலியல் புகார்  எழுந்துள்ளது அதிர்ச்சியடையவைத்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு கேரள மாநிலத்தின் கொச்சி ஜலந்தரின் முன்னாள் பேராயர் ஃபிராங்கோவால் 2014- 16 ஆகிய காலங்களில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டேன் என்று கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். இந்த சம்பவம் கேரளாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு கிருஸ்துவ தேவாலயங்கள் மீது கடும் அவப்பெயர் ஏற்பட்டது. இந்த புகார் உறுதி செய்யப்பட்ட நிலையில் பேராயர் பிராங்கோ முல்லக்கல் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அதே ஆண்டின் அக்டோபரில் 16ஆம் தேதி பேராயர் ஃபிராங்கோவுக்கு ஜாமீன் கிடைத்தது. பாலியல் புகாரில் சிக்கிய பேராயருக்கு எதிராக காவல்துறை 1,400 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை தொடர்ந்து மேலும் 3 பேராயர்கள், 11 மதகுருமார்கள் , கன்னியாஸ்திரி உட்பட 83 பேர் சாட்சியங்களாகச் சேர்க்கப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது.

இது தொடர்பான விசாரணை நடந்துவருகிறது. சாட்சியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக விசாரிக்கப்பட்டுவருகின்றனர். இந்நிலையில் பேராயர் ஃபிராங்கோ மீது மற்றொரு கன்னியாஸ்திரி பாலியல் புகார் அளித்துள்ளது கேரளாவை உலுக்கியுள்ளது.அப்போது பேராயர் என்னிடம் வீடியோ காலில் பேசுவார் , என்னுடைய உடல் பக்கத்தை காட்ட சொல்வார், யாரும் இல்லை என்றால் என்னை தொட முயற்சிப்பார் என்று தெரிவித்தார்.

வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போது 2ஆவதாக ஒரு கன்னியாஸ்திரி பேராயர் ஃபிராங்கோ மீது பாலியல் புகார் தெரிவைத்தையடுத்து அவர் டயோசீசன் பேராயர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |