Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“உன்னுடன் பேச விருப்பமில்லை” கவரிங் செயினை பறித்து சென்ற வாலிபர்…. போலீஸ் அதிரடி..!!

மாணவியிடம் கத்தியை காட்டி கவரிங் செயினை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் வெங்கடேசபுரம் பகுதியில் 19 வயது கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இவர் நேற்று காலை கல்லூரி செல்வதற்காக அரக்கோணம் எஸ்.ஆர். கேட் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த வாலிபர் மாணவியை வழிமறித்து என்னுடன் பேச மாட்டாயா என கேட்டுள்ளார். அதற்கு உன்னுடைய நடவடிக்கை சரியில்லை. அதனால் உன்னுடன் பேச நான் விரும்பவில்லை என மாணவி கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி மாணவியின் கழுத்தில் அணிந்திருந்த கவரிங் செயினை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அரக்கோணம் பகுதியை சேர்ந்த சோபன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |