பிலிப்பைன்ஸ் நாட்டின் காகயான் மாகாணத்தில் ரஷீத் மங்கா கோப்(78) என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹலிமா என்ற பெண்ணை இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்ளார். அதன் பிறகு இவர்கள் நாளடைவில் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
தற்போது அந்தப் பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடைந்துள்ள நிலையில் அவர்கள் இருவரும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.பிலிப்பைன்ஸ் நாட்டின் அரசியல் சட்டத்தின் படி 21 வயது பூர்த்தியாவதற்கு முன்பே பெற்றோரின் அனுமதி இருந்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது தூய்மையான காதல் உறவு என அந்த முதியவர் கூறியுள்ளார்.