மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக இரண்டு பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் பகுதியில் 17 வயது மாணவி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி செல்போன் பயன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பரணி, மூர்த்தி ஆகிய 2 பேரும் உனக்கு செல்போன் எங்கிருந்து கிடைத்தது என்று கேட்டு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அதனை செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பரணி மற்றும் மூர்த்தி ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.