இந்திய குடிமக்களின் முதியோர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஊதியம் மற்றும் முதலீடு திட்டம் தான் NPS திட்டம் ஆகும். இந்த தேசிய பென்ஷன் திட்டத்தை ஒழுங்குமுறை ஆணையமான PFRDA தான் நிர்வகித்து வருகிறது. 18 வயது பூர்த்தி செய்திருந்தாலே தேசிய பென்ஷன் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இதற்கிடையில் கூடிய விரைவில் உத்தரவாத்துடன் வருமானம் தரக்கூடிய பென்ஷன் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று PFRDA தலைவர் சுப்ரதீம் பந்தோத்யாய் அறிவித்துள்ளார். அதாவது கடந்து 2003 ஆம் ஆண்டு வரைக்கும் மட்டுமே அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பலன் கிடைத்து வந்தது. அதன் பிறகு கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இதற்கு அரசு ஊழியர்கள் பலரும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் உத்தரவாத பென்ஷன் திட்டம் இந்த மாத இறுதிக்குள் கண்டிப்பாக தயார் செய்யப்படும் என்று தலைவர் சுப்ரீம் பந்தோத்யாய் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் குறைந்தபட்ச வருமான உத்தரவத்துடன் கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளார். இதனையடுத்து பென்ஷன் வழங்குவது குறித்து நீதி மேனேஜர்கள், நிபுணர் குழு உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த பென்ஷன் திட்டம் முழுக்க முழுக்க புது வகையான திட்டம் என்பதால் அறிமுகம் செய்ய சில நாட்கள் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் வருமானம் எவ்வளவு விகிதத்தில் வழங்கப்படும் என்பதற்கான முடிவும் எடுக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.