Categories
தேசிய செய்திகள்

உத்திரபிரதேசத்தில் கள்ள நோட்டுகள் அச்சடிப்பு…. ஒருவர் கைது….இதற்குப் பின்னால் உள்ள கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு….

உத்திரப்பிரதேசத்தில் கள்ள நோட்டு அச்சடித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலம் பலோங்சி பகுதியில் கள்ள நோட்டுகள் அச்சடிக்க படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மொராதாபாதை சேர்ந்த நவாப் என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு கடந்த மூன்று மாதங்களாக கள்ள நோட்டுகளை அச்சடித்து வருவதும் அதனை உள்ளுர் சந்தையிலேயே புழக்கத்தில் விடுவதும் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பலோங்கி பகுதியைச் சேர்ந்த ஒருவர் நவாப்புக்கு கள்ள நோட்டுகள் அச்சடிக்க கற்றுக் கொடுத்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூபாய் 69 ஆயிரம் கள்ளநோட்டை கைப்பற்றினர். மேலும் கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட லேப்டாப், கலர் பிரிண்ட் மற்றும் போலி நாணயம் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட உயர்ரக காகிதம் போன்றவை கைப்பற்றப்பட்டன. இதனை தொடர்ந்து இவர்களுக்கு போலி நாணயம் அச்சடிக்க தேவையான உபகரணங்களை கொடுத்தவர்கள் பற்றிய தகவல்களை போலீசார் திரட்டி வருகின்றனர்.

Categories

Tech |