உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. விழுப்புரம் ,நீலகிரி மண்டலங்களில் உள்ள கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.