உதவி இயக்குனராக இருந்த பொழுது எடுக்கப்பட்ட கார்த்தியின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் கார்த்தி. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விருமன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாக உள்ளது.
இந்த நிலையில் கார்த்தி தமிழ் சினிமா உலகில் நடிகராக அறிமுகமாவதற்கு முன்பாக இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தது நமக்கு தெரிந்தது. இந்த நிலையில் ஆயுத எழுத்து பட சூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்பொழுது வெளியாகி உள்ளது.