உதவி அதிகாரி பணிக்கு தேர்வானவர்கள் பட்டியலை ரத்து செய்யக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மதுரை டாக்டர்கள் சுகந்தி, முஜிதா பாய் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது, சென்ற 2017 ஆம் வருடம் சித்த மருத்துவ துறையில் தற்காலிக அடிப்படையில் மருத்துவத் தேர்வு வாரியம் வெளியிட்ட உதவி மருத்துவ அறிக்கையில் தேர்வானவர்களின் இறுதி பட்டியலில் எங்கள் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் உரிய மதிப்பெண் பெற்றும் ஆதிதிராவிடர்களின் இட ஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்படவில்லை.
இந்த பட்டியல் இட ஒதுக்கீடு கொள்கை பின்பற்றி தயாரிக்கவில்லை. ஆகையால் பட்டியலை ரத்து செய்து தகுதியானவர்களின் பட்டியலை வெளியிட உத்திர வேண்டும் எனக் கூறியிருந்தார்கள். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஆதிதிராவிடர்களின் இட ஒதுக்கீட்டின்படி மனதாரர்கள் 4 ஐந்தாவது 5-வது இடத்தை பிடித்துள்ளார்கள். பொதுப்பிரிவில் 12 பேரை நியமித்ததை ஏற்க முடியாது. ஆனால் தற்போது பணியாற்றிக் கொண்டிருப்பவர்களை பணி நீக்கம் செய்வது தேவையற்றது. அந்த வேலையில் பணியமர்த்தப்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய முடியாது. ஆனால் 12 வாரத்தில் மனுதாரருக்கு பணி வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.