Categories
அரசியல்

உதயநிதி ஸ்டாலின் நன்றி மறந்தாரா?…. போர்க்கொடி தூக்கிய முஸ்லிம்கள்…. தமிழக அரசியலில் பரபரப்பு….!!!!

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலினுக்கு வெற்றி வாய்ப்பை தேடிக் கொடுத்தது பெரும்பாலான முஸ்லிம்கள் தான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் தொகுதியான சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் வார்டு 62, வார்டு 114, வார்டு 115, வார்டு 116, வார்டு 119, வார்டு 120 என மொத்தம் 6 வார்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லையாம்.

எனவே உதயநிதி ஸ்டாலினை பதவியில் அமர வைத்து அழகு பார்த்த முஸ்லிம்களுக்கு வார்டு கவுன்சிலர் ஆகின்ற தகுதியை கிடையாதா ? என்று முஸ்லிம்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் வேட்பாளர்கள் தேர்வு செய்யபட்ட விவரம் உதயநிதி ஸ்டாலினுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே கிடையாது. எனவே முஸ்லிம்களை உதயநிதி ஸ்டாலின் புறக்கணித்து இந்த முடிவை எடுத்துள்ளார் என்று குற்றம்சாட்டி வருகின்றனர். இவ்வாறு முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது தங்களுக்கு வேதனை அளிப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.

Categories

Tech |