சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டுமென திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 14ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொண்டதாகவும் அதனால் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் அமைச்சராக பதவி ஏற்பார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. மேலும் அவருக்கு இளைஞர் நலன் விளையாட்டு துறை மற்றும் உள்ளாட்சித் துறை போன்ற இலாக்களில் ஒன்று வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.