உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது எப்போது என திமுகவினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரது பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. ஆனால் அப்போது அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனை தொடர்ந்து டிச. 14ல் அமைச்சர் ஆக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதை உறுதி செய்யும் வகையில் அமைச்சர் பி.மூர்த்தி திமுக இளைஞரணி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
அதில், உதயநிதி விரைவில் அமைச்சராக பொறுப்பு ஏற்க உள்ளதால் இளைஞர் அணி மேலும் ஊக்கமடையும்; கட்சியில் அமைச்சராகுவதற்கு இளைஞர் அணிதான் அடித்தளம். எனவே, இந்த அணியில் இருப்பவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.