நேற்று தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, ஒவ்வொரு பூத்துக்கு போகும் போதும், மக்களை சந்திக்கும் போதும், அவங்களை பார்க்கும்போதும், செக் பண்ணும்போதும்…. வேட்பாளராக போகும்போதும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. எங்கள் ஏரியாவிலும் EVM மெஷின் பிரச்னை இருந்தது.
அரை மணி நேரம், முக்கால் மணி நேரத்தில் சரி செய்து விட்டார்கள்.பாஜகவின் வெற்றி வாய்ப்பு பற்றி இந்த நேரத்துல அதை பத்தி எதுவுமே சொல்ல கூடாது. தேர்தல் நடத்தை விதி தெரியும், அதை முழுமையாக பின்பற்ற வேண்டும். உதயநிதி ஸ்டாலின் சட்டையில் திமுக கொடியோடு வாக்களித்ததற்கு தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்கணும்.
நாம அப்படி செய்யக்கூடாது. ஆனால் எல்லாத்தையும் மீறி செய்வோம் என்ற விஷயம் திமுகவிடம் உள்ளது. விதிகளை திமுக பின்பற்றுவதே கிடையாது. இன்றும் விதிகளை மீறி தான் உதயநிதி ஸ்டாலின் செய்துள்ளார். தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்கணும்.
தமிழகத்தில் அதிமுகவுக்கு எதிரான அலை திமுகவுக்கு சாதகமாக அமையும் என ஸ்டாலின் கூறியது பற்றி ஏதும் சொல்ல விரும்பல. மே 2ஆம் தேதி முடிவு வரும், பிறகு ஸ்டாலின் அவர்களிடம் பேசிப்போம் என குஷ்பு தெரிவித்தார்.