உதயநிதி படத்திற்காக எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை கைவிட்ட ஆரவ்.
முன்னணி நடிகரான சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். பாண்டியராஜ் இயக்கும் இத்திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னராகி பிரபலமான நடிகர் ஆரவ் நடிக்க இருந்தாராம்.
ஆனால் ஆரவ் அப்போது உதயநிதியின் மகிழ்திருமேனி திரைப்படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை அதிகரித்து இருந்ததால் வில்லன் கதாபாத்திரத்திற்கு செட்டாகாது என நடிக்கவில்லையாம். இதனால் அந்த கதாபாத்திரத்தில் வினை நடித்துள்ளார். இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் இன்று வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.