Categories
மாநில செய்திகள்

உதயசந்திரன் ஐஏஎஸ் அப்படி நடந்து கொள்ளலாமா…..? ரூ. 50,000 கோடிக்கு மேல் லஞ்சம்…. திமுகவை கடுமையாக சாடிய அதிமுக மாஜி….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகம் எதிரே அதிமுக கட்சியின் சார்பில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமை தாங்கினார். இவர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசியதாவது, அதிமுக ஆட்சிக் காலத்தின் போது எந்த ஒரு வரியையும் உயர்த்தவில்லை. ஆனால் தற்போது குடிநீர் மற்றும் சொத்து வரியை அதிகரித்ததோடு, மின் கட்டண உயர்வையும் 12 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக அதிகரித்துள்ளனர். ‌ நாங்கள் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி அடைந்ததால் எங்கள் மீது கோபம். இந்த திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் லஞ்சம். இந்த அரசு 50,000 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் வாங்கி விட்டனர். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு முன்னாள் அமைச்சர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  அதற்கு உறுதுணையாக ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் இருக்கிறார்.

இப்போது பதவியில் இருக்கும் அனைத்து அமைச்சர்களும் கொள்ளையடிக்கும் பணத்தை திமுக குடும்பம் வாங்கிக் கொள்கிறது. இதற்கு உதயசந்திரன் துணையாக இருந்து ஒரு திமுக காரர் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இவருடைய தூண்டுதலின் பேரில் தான் கொடநாடு கொலை வழக்கு விசாரணை கூட நடக்கிறது. ஒரு ஐஏஎஸ் அதிகாரி இப்படி நடந்து கொள்ளக் கூடாது. தினந்தோறும் அதிமுக நிர்வாகிகள் மீது எப்படி வழக்கு பதிவு செய்யலாம் என்று ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்கள். வருகிற 2024 ஆம் ஆண்டு தேர்தலில் 40-க்கு 40 சீட்டுகள் வென்று சட்டமன்றத் தேர்தலில் 200 சீட்டுக்கு மேல் வென்று காட்டுவோம். கோவை மாநகர டிசி சிலம்பரசன் சினிமாவில் நடிக்கும் சிலம்பரசனா? இவர் எங்களுடைய கட்சி பெண்கள் மீது கை வைக்கிறார். இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இதை நாங்கள் மறக்க மாட்டோம். சாலை போடுவதற்கு வக்கில்லை. ஆட்சியர் பொம்மை போல் இருக்கிறார்.

கோவைக்கு திமுக அரசு எதுவுமே செய்யவில்லை. பாலம் கட்டும் பணிகளை கிடப்பில் போட்டுவிட்டு, தரம் இல்லாத பொங்கல் பரிசுகளை கொடுத்து வரிகள் அனைத்தையும் உயர்த்தி விட்டனர். ஜீ ஸ்கொயருக்கு மட்டும் அப்ரூவல் கொடுக்கும் திமுக அரசு, மற்றவர்களை மிரட்டி ஆட்சி செய்கிறது. திமுக குடும்பம் எப்போதுமே எதிரி தான். அதனால்தான் என்னுடைய வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். என் வீட்டில் உள்ள சோபா மற்றும் சேர் செட்டுகளை கூட காவல்து றையினர் எண்ணி விட்டு சென்றனர். ரெய்டு என்கிற பெயரில் காவல்துறையினர் தொண்டர்களை பிடித்து தள்ளி விட்டதுடன், நமது சகோதரிகளின் சேலையை பிடித்து இழுத்து தள்ளிவிட்டனர். காவல்துறையை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். சம்பந்தப்பட்ட காவல்துறையினரின் சட்டையை நான் கழட்டாமல் விடமாட்டேன். காக்கி சட்டை போடவே முடியாது. நாங்கள் மனித உரிமை கமிஷனுக்கு செல்ல போகிறோம் என்றார்.

Categories

Tech |