உண்மை சம்பவத்தை மையமாக வைத்து சூர்யா 40 படம் உருவாகி வருவதாக தகவல் பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இவரின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், திவ்யா துரைசாமி, சூரி, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார்.
கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக வைத்து சூர்யா 40 படம் உருவாகி வருவதாக தகவல் பரவி வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா பெண்களுக்காக போராடுபவராக நடித்து வருவதாக கூறப்படுகிறது . ஆனால் இதனை படக்குழு தரப்பில் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .