அனைத்து மாநில முதல்வர்களும் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் மீதான வரியை உயர்த்திய முட்டாள் தான் அதை குறைக்க வேண்டும் என்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் பாஜக அரசை கடுமையாக சாடினார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது:”தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ் ஆட்சி அமைந்ததிலிருந்தே வாட் வரி உயர்த்தப்படவில்லை.
ஒரு பைசா கூட நாங்கள் உயர்த்தவில்லை. எந்த முட்டாள் நம்மிடம் வாட் வரியை உயர்த்தினார்களோ, அவர்கள்தான் குறைக்க வேண்டும். மேலும் பெட்ரோல் டீசல் மீதான செஸ் வரியை மத்திய அரசு நீக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார். இவர் பேசியதற்கு எதிராக பாஜகவைச் சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய பாஜக அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் நாட்டிற்கு எதிரானவர்கள் என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பாஜக அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் நாட்டிற்கு எதிரானவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள் என்றும், அந்நிய நாடு ஆக்கிரமித்துள்ள இந்திய எல்லைகளை மத்திய அரசு பாதுகாக்க தவறி விட்டது என நான் கூறினால் நான் தேச விரோதியா? மேலும் செஸ் வரியை மத்திய அரசு திரும்பப் பெற்றால் மட்டுமே பெட்ரோல் விலை ரூபாய் 77 ஆக குறையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.