Categories
உலக செய்திகள்

உண்மையை ஒப்புக்கொண்ட ஜெர்மன்… இனிமே இப்படி நடக்காது… மக்களுக்கு எச்சரிக்கை…!!!

ஜெர்மன் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் அவசியம் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஜெர்மனி நாட்டில் கொரோனா தொற்றானது தற்போது மூன்றாவது அலையாக பரவி வருகிறது என்று சான்ஸலர் மெர்க்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது நாடாளுமன்ற கட்சி உறுப்பினர்களுடன் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதை பற்றி கூறினார். இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் 7ஆம் தேதி  அமல்படுத்தப்பட்ட  ஊரடங்கு உத்தரவுகளை படிப்படியாக தளர்த்துவது குறித்து கூறியுள்ளார். நோய்த் தொற்றானது மூன்றாவது அலையாக பெருகி வருவதால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையில் மிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சரியான நேரத்தில் ஆஸ்திரியா மற்றும் குடியரசு நாடுகளின் எல்லைகளை மூடியதால் ஜெர்மனி அதிகக் கொரோனா  தொற்றிலிருந்து தப்பியதாக நாடாளுமன்றக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். மேலும் வேகமாக பரவிவரும்  உருமாற்றமாற்றமடைந்த கொரோனா மற்றும்  குறைவாக இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசி ,ஆகியவற்றினால் ஜெர்மனியானது மிக கடினமான சூழ்நிலையில் அமைந்துள்ளது.

பிரிட்டானியா நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பூசியானது  பாதுகாப்பாக இருப்பதாகவும் , இதனால் மக்கள் அவசியமாக தடுப்பூசியை எடுத்துக் கொள்ளுமாறும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டது. இந்த  பிரித்தானிய தடுப்பூசியானது நம்பகத்தகுந்ததாக இருப்பதாக கூறியுள்ளார் .

Categories

Tech |