நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம், தேர்தல் வரைவு சட்டம் ஒவ்வொரும் டைம் நீங்கள்தான் முதலில் வெளியிடுகிறீர்கள். இந்த தடவை மற்ற கட்சிகள் வெளியிட்ட பிறகும் இன்னும் நாம் தமிழர் வெளியிடாத காரணம் என்ன? என்ற கேள்வியை பத்திரிக்கையாளர்கள் கேட்டனர். அதற்க்கு, காசு இல்லை, உண்மையிலேயே அதுதான். போனமுறை கொஞ்சம் முன்கூட்டியே தயாராக இருந்தோம். இப்பொழுது திடீரென்று வந்ததால் வெளியிட முடியவில்லை.
அதிகார பலமும் பணபலமும் இந்த தொகுதியில் திராவிட கட்சியின் இருந்த நிலையில், நீங்கள் எந்த ஒரு பணமும் கொடுக்க மாட்டேன் என்று சொல்லும் நிலையில் உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்று நினைக்கிறேயர்கள் என்றால், அதிகார பலம், பணபலம் உள்ள திராவிட கட்சிகள் போட்டியிடும் தொகுதியிலும், சிறப்பாக வேலை செய்து நான் வெல்லுவேன், உறுதியாகவே வெல்லுவேன், நீங்கள் பார்க்க போகிறீர்கள்.
நீங்கள் சொல்கிறீங்க அதிகார பலம், பண பலம் என்று, அதை வீழ்த்துவதற்கு தான் நான் ஒரு மாற்று அரசியல் புரட்சியை முன் எடுக்கிறேன். பணம் இருக்கிறவன் தான் அரசியல் செய்ய முடியும் என்ற கோட்பாட்டை ஒழிக்க வில்லை என்றால், இது முதலாளிகளின் லாபத்திற்க்கான அமைப்பாக மாறிவிடும். மக்களுக்கு தூய உள்ளத்தோடு சேவை செய்ய வேண்டும் என்ற மன உள்ளவனும் வெல்லமுடியும், அரசியல் செய்ய முடியும் என்ற நிலை உருவாக்க வில்லை என்றால், தீய ஆட்சிதான் தொடரும், தூய ஆட்சி மலராது. கேடுகெட்ட பணநாயகம் தான் நிற்கும். மாண்புமிக்க ஜனநாயகம் மலராது.
இதை மாற்ற முடியாது, இது சரிவராது என்று விலகி போக முடியாது. போராடித்தான் ஆக வேண்டும், இழந்து விட்ட உரிமைகளை பிச்சை எடுத்து பெற முடியாது, போராடித்தான் பெற்றாகவேண்டும் என்பதை புரட்சியாளர் அம்பேத்கார் அறிவுறுத்துகிறார். அந்த வழியில் இதை போராடித்தான் வென்றாக வேண்டும். நாங்கள் சிறந்த தொடக்கத்தை முன்வைப்போம். நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்கு சமம் என்பார்கள். நாங்கள் ஆகச்சிறந்த தொடக்கத்தை செய்துகொண்டிருக்கிறோம். எப்படி வருகிறது என்று பாருங்கள் ? மே 2ஆம் தேதி பார்ப்பீர்கள் என சீமான் தெரிவித்தார்.