எவ்வித பிடிமானமும் இன்றி 48 மாடி கட்டிடத்தில் ஏறிய முதியவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
பிரெஞ்சு நாட்டின் ஸ்பைடர் மேன் என்று அழைக்கப்படுபவர் அலைன் ராபர்ட். இவர் ஈபில் கோபுரம், கோல்டன் கேட் பாலம் போன்றவற்றை ஏறியதன் மூலம் இவருக்கு இந்த பெயர் வந்தது. இந்நிலையில் பாரிஸ் நகரில் உள்ள 187 மீட்டர் உயரமுள்ள 48 மாடி கட்டிடத்தில் எவ்வித பிடிமானமும் இல்லாமல் எறியுள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது. 60 வயது என்பது ஒரு பிரச்சனை இல்லை என்பதை நான் நாட்டு மக்களுக்கு கூற விரும்பினேன்.
நீங்கள் இன்னும் விளையாடலாம், சுறுசுறுப்பாக இருக்கலாம். மேலும் நான் 60 வயதை எட்டியதும் இதில் ஏறுவேன் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு உறுதியளித்தேன். ஏனென்றால் 60 வயது என்பது பிரான்சில் ஓய்வு பெறும் வயதைக் குறிக்கும். இதை ஒரு நல்ல உணர்வு என்று நான் நினைத்தேன் என தெரிவித்துள்ளார்.