Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“உண்டியலுக்காக இப்படியா பண்ணுவீங்க”…. கொள்ளையர்கள் செய்த கொடூரம்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

பட்டபகலில் மூதாட்டியை கொலை செய்துவிட்டு உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள ஆயிரவேலி கிராமத்தில் பூங்கோதை (65) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், பூங்கோதை தன் 2-வது மகன் ஈஸ்வரனுடன் வசித்து வந்தார். ஈஸ்வரன் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் ஈஸ்வரன் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் அவரது தாயார் பூங்கோதை ரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரன் உடனடியாக திருவாடானை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தியுள்ளனர். இதனையடுத்து தடயவியல் நிபுணர்களை கொண்டு வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் பூங்கோதை வீட்டின் பூஜை அறையில் உள்ள  ஈஸ்வரன் ஆட்டோ வாங்கும் போது வாங்கிய கடனுக்கான தொகையை ஒரு உண்டியலில் சிறுக சிறுக சேர்த்து வந்தார்.  அந்த உண்டியல் உடைந்த நிலையில் அதில் இருந்த 10,000 ரூபாய் திருடுபோய் இருந்துள்ளது.

இந்நிலையில் மர்மநபர்கள் திட்டமிட்டு பூங்கோதை வீட்டில் தனியாக இருந்ததை அறிந்து அவரை இரும்பு கம்பியால் தாக்கி கொன்றுவிட்டு உண்டியலில் இருந்த பணத்தை திருடிவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. ஆனால் பூங்கோதை அணிந்திருந்த கம்மல், வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் இருந்த இடத்திலேயே இருந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலிலேயே மர்மநபர்கள் வீடு புகுந்து கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |