Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உணவு தரமாக உள்ளதா….? ஆட்சியரின் திடீர் ஆய்வு…. பள்ளி கட்டிடங்கள் குறித்து சோதனை….!!

அரசு பள்ளி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள மங்களபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி செயல்பட்டு வருகிறது. இவற்றை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதனையடுத்து பள்ளி கட்டிடங்கள், மாணவ மாணவிகளின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் விவரம், வருகை பதிவு உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்துள்ளார்.

இதனை தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் ஆய்வு செய்த ஆட்சியர் அங்கு குடிநீர் கழிப்பிட வசதிகள், படுக்கை வசதிகள் முறையாக உள்ளதா, உணவுகள் தரமான முறையில் வழங்கப்படுகிறதா எனவும் மாணவர்களிடம் கேட்டறிந்துள்ளார். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர், விடுதி காப்பாளர், அரசு அதிகாரிகள் என பலரும் உடனிருந்தனர்.

Categories

Tech |