உணவு சாப்பிட்டபின் என்ன விஷயங்களை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.
நம் வாழ்க்கையில் இன்றியமையாதது உணவு. உணவுக்காக தான் பணம் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறோம். அப்படிப்பட்ட உணவை நாம் ஆரோக்கியமாக எடுத்துக்கொள்வது முதலில் முக்கியமான ஒன்று. அதில் முக்கியமாக நாம் காய்கறிகள் பழங்கள் கீரைகள் போன்ற சத்தான உணவுகளை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி நாம் சாப்பிட்ட பிறகு சில விஷயங்களை கட்டாயம் செய்யவே கூடாது. அப்படி செய்தால் நம் உடலுக்கு சில பிரச்சனைகள் வந்து சேரும். அவை என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.
சாப்பிட்ட உடனே நடந்தால் உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இது தவறானது. சாப்பிட்ட உடனே நடந்தால் உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும்.
சாப்பிட்டதும் தூங்கக் கூடாது சாப்பிட்டவுடன் படுக்கைக்கு சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் செரிமானம் ஆகாது.
உணவருந்திய பிறகு ரத்த ஓட்டம் நமது வயிற்றுப் பகுதிக்கு தான் செல்ல வேண்டும். சாப்பிட்ட உடன் வெந்நீர் குடிப்பதால் சூடான உடலை குளிர்ச்சியாக்க செய்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று விட வைக்கின்றது.
சாப்பிடும்போதோ, சாப்பிடுவதற்கு முன்போ பழங்களை சாப்பிடக்கூடாது. வயிற்றில் வாயுவை உருவாக்கும்.
சாப்பிட்டதும் தேநீர் குடிக்கக் கூடாது. தேயிலை அதிக அளவில் அமிலங்கள் உள்ளதால் உணவு செரிமானத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.
சாப்பிட்ட உடன் புகை பிடிக்கக் கூடாது. மது அருந்துதல் கூடாது. இது புற்று நோயை ஏற்படுத்தும்.
உணவு அருந்திய பிறகு இடுப்பு பெல்ட்டை தளர்த்த கூடாது. தொப்பை உள்ளவர்கள் சாப்பிட்ட பிறகு இடுப்பில் உள்ள பெல்டை தளர்த்தி விடுவார்கள். இதனால் உடனடியாக உணவு குடலுக்கு சென்று செரிமானக் கோளாறை ஏற்படுத்தும்.