அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கூண்டுக்குள் அத்துமீறி நுழைந்த ஊழியரை புலி கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் நேப்பிள்ஸ் உயிரியல் பூங்காவின் கழிவறைகளை சுத்தம் செய்ய வந்த ஒப்பந்த ஊழியர் ஒருவர் மனிதர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தார். இதனையடுத்து ஊழியர் மலேசிய புலி ஒன்றுக்கு உணவளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ஊழியரின் கையை இறுக்கமாக கவ்விய புலி அவரை கூண்டுக்குள் இழுத்து போட்டு கடித்து குதறியது.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு சென்றனர். அதன்பின் புலியின் வாயில் இருந்த ஊழியரின் கையை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக காவல்துறையினர் அந்த புலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இதனையடுத்து படுகாயம் அடைந்த ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.