உக்ரைன் ரஷ்யா போரால் சுமார் 40 ஆயிரம் உக்ரைன் மக்கள் அகதிகளாக சுவிட்சர்லாந்துக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்த 40 ஆயிரம் அகதிகளின் வருகையை சமாளிக்க முடியாமல் சுவிட்சர்லாந்து அரசு திக்குமுக்காடி வருகிறது. இந்நிலையில் நூற்றுக்கணக்கான உக்ரேனிய அகதிகள் உணவுக்காக மத்திய சூரிச்சில் நீண்ட வரிசையில் காத்து கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதிகாரப்பூர்வ தங்குமிடங்களில் உள்ள அகதிகள் அரசிடமிருந்து சில நிதி உதவிகளை பெறுகின்றன எனினும் அந்த நிதி அவர்கள் வாழ்க்கையை ஓட்டுவதற்கு போதுமானதாக இல்லை. நிலைமை இவ்வாறு இருக்க உக்ரேனிய அகதிகள் சூரிச்சில் உணவுக்காக நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றனர் என சில தொண்டு நிறுவனங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன.