உணவில்லாமல் தவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 46 லட்சத்திற்கு அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரியாவில் ஊழல், அண்டை நாடான லெபனான் கொடுக்கும் பொருளாதார நெருக்கடி, மேற்கிந்திய பொருளாதாரத் தடைகள் மற்றும் உள்நாட்டுப்போர் போன்ற பல பிரச்சினைகளால் கடந்த 10 வருடங்களில் மட்டும் நாலு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு நாட்டு மக்களின் மொத்த தொகையில் பாதிபேர் இடம்பெயர்ந்துவிட்டனர். சில மாதங்களுக்கு முன்பு உள்ளூர் நாணயம் செயலிழந்து போனதால் உணவு கூட வாங்க முடியாமல் பல குழந்தைகள் தவித்தனர்.
இதனிடையே போர் நடந்து நிலைகுலைந்து இருந்த சிரியாவை கொரோனா தொற்றும் விட்டுவைக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக சிரியா முழுவதும் உணவு இல்லாமல் தவித்து வரும் குழந்தைகளின் எண்ணிக்கை 46 லட்சத்திற்கு அதிகரித்துள்ளது என்ற தகவலை சேஞ் தி சில்ட்ரன் எனும் அமைப்பு வெளியிட்டுள்ளது . இது குறித்து சேவ் தி சில்ட்ரன் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கடந்த மூன்று மாதங்களாக சிரியாவில் 65 சதவீத குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவான வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழ வகைகள் கிடைக்கவில்லை.
அமெரிக்காவில் இருக்கும் சிரிய ஜனநாயக படைகளின் கட்டுப்பாட்டில் அமைந்திருக்கும் சிரியாவில் 9 மாதங்களாக 25 சதவீத குழந்தைகள் பழவகைகளை சாப்பிடவில்லை. அங்கிருக்கும் 8 குழந்தைகளில் ஒரு குழந்தை ஊட்டச் சத்து குறைபாடினால் உடல் நலக்குறைவை எதிர்கொள்கிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு குழந்தைகளை காப்பாற்றும் பொருட்டு சர்வதேச சமூகம் உதவிக்கரம் நீட்டி உதவிட வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.