இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் ஏராளமான மக்கள் வாழ்கின்றனர். ஆனால் வறுமை கோட்டிற்கு கீழ் ஏராளமான மக்கள் வாழ்ந்தாலும் பெற்றோர்களால் கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையில் ஏராளமான குழந்தைகள் இருக்கின்றனர். இந்த குழந்தைகளுக்கு இந்தியாவைச் சேர்ந்த பாத்திமா ஜாஸ்மின் என்ற பெண்மணி பல உதவிகள் செய்துள்ளார்.
அதன் பின் பாத்திமா ஜாஸ்மின் மக்கள் கூடும் பொது இடங்களில் ஒரு ஃப்ரிட்ஜ் வாங்கி வைத்துள்ளார். அந்தப் பெண்ணின் செயலைப் பார்த்து பலர் கேலி செய்துள்ளனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல தங்களுடைய வீடுகளில் மிச்சமான உணவு பொருட்கள், ஆடைகள் போன்ற பொருள்களை அந்த ஃபிரிட்ஜில் பலர் வைக்க ஆரம்பித்தனர். அந்த உணவுகளை வறுமையில் வாடும் ஏழை, எளிய மக்கள் பிச்சைக்காரர்கள் போன்றவர்கள் எடுத்து சாப்பிட்டுள்ளனர்.