Categories
மாநில செய்திகள்

உடுமலையில் கொட்டும் கோடை மழை…. நெல் நடவிற்காக தயாராகும் மக்கள்…..!!!!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை அருகில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் குருமலை, மாவடப்பு, ஈசல்திட்டு, குழிப்பட்டி, கோடந்தூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வன குடியிருப்புகள் அமைந்துள்ளது. இங்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அங்கு வனசிறு மகசூல் சேகரம் மற்றும் சிறிய பரப்பளவில் விவசாயப் பணிகளை செய்து வருகின்றனர். அதன்படி மலைப்பகுதிகளில் தட்டை, அவரை, பீன்ஸ், வரிமொச்சை, கேழ்வரகு, சாமை, தினை உள்ளிட்ட பயறுவகைகளை பயிரிட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஓடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி குறைந்த காய்கறிகளையும் பயிரிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பெய்து வரும் கோடை மழையை பயன்படுத்தி குழிப்பட்டி குருமலை உள்ளிட்ட மலை கிராமங்களில் அந்த மக்கள் நிலத்தை எருதுகளை கொண்டு உழவு ஓட்டி பன்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். ஏனெனில் கோடை மழையை பயன்படுத்தி நெல் நடவிற்கான வயல்போல நிலங்களில் உழவு ஓட்டி களைச்செடிகளை மடிய வைக்க இவ்வாறு சேற்று உழவை மேற்கொள்கின்றனர். இப்போது மாவட்டத்தில் அதிகபட்சம் உடுமலை வனச்சரக பகுதிகளுக்கு உட்பட்ட மலைப்பகுதிகளில் அதிகமான மழை பொழிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |