பச்சை பயறை வைத்து, நோயுற்றவர்களுக்கு தெம்பு தரும் கஞ்சி தயாரிக்கலாம். இந்த கஞ்சியை செய்து சாப்பிட்டு வந்தால், எளிதில் ஜீரணம் ஆகும்.
பச்சை பயறு பால் கஞ்சி செய்ய தேவையான பொருட்கள்:
பச்சை பயறு – 1/2 கப்
உப்பு – தேவைக்கேற்ப,
பால் – 2 கப்.
செய்முறை:
முதலில் பச்சை பயறை நன்கு வறுத்து பொடி செய்து கொள்ளவும். பின் அதனுடன் நீர்விட்டு கரைத்து வடிகட்டி கொள்ளவும்.
தொடர்ந்து வடிக்கெட்டிய தண்ணீருடன், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின் கஞ்சி பதம் வந்தபின், 2 கப் பால் சேர்க்கவும்.
இப்போது பச்சை பயறு பால் கஞ்சி தயார். அதனை குடித்து வர நோயுற்றவர்களின் உடல் நலம் பலம் கூடும்.