நாடு முழுவதும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதையடுத்து அனைத்து பணிகளும் இயல்பாக நடைபெற தொடங்கிவிட்டன. இத்தனை நாட்களாக வீட்டிற்குள் முடங்கிக் கிடந்த மக்கள் வெளியே செல்லத் தொடங்கி விட்டனர். இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு தொடர்ச்சியாக பணிக்கு செல்வதால் பலர் உடல் சோர்வாக இருப்பதை போன்ற உணர்ச்சியை பெறுகிறார்கள். நீங்கள் இப்படியான சோர்வை உணர்கிறீர்களா ? அப்படி என்றால்,
இந்த செய்தி தொகுப்பு உங்களுக்கு தான். நமது உடலில் இரும்புச்சத்து ஹீமோகுளோபினின் முக்கிய அங்கமாக இருக்கும். அது குறையும் போது உடல் தானாகவே பலவீனமாகும். உடலில் உள்ள செல்களுக்கு போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்க வில்லை என்றாலும், உடல் பலவீனமடையும். அதனால் பச்சை இலை காய்கறிகள், இறைச்சி வகைகள், மீன், பழங்கள், நட்ஸ் வகைகளை அதிகமாக சாப்பிடுவது உடல் சோர்வை ஏற்படுத்தாது. சுறுசுறுப்பாக வைத்திருக்கும். மேலும் சிறுசிறு உடற்பயிற்சிகளை அவ்வப்போது மேற்கொள்வது நல்லது.