தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.
தேமுதிக கட்சியின் தலைவரான விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அவரின் மனைவி பிரேமலதாவும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.சில நாட்களுக்கு பின்னர் இருவரும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து கடந்த 2ஆம் தேதி வீடு திரும்பினர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆறாம் தேதி விஜயகாந்த் மீண்டும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு பிறகு விஜயகாந்த் உடல்நிலை சரியானது. மேலும் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்த நிலையில் விஜயகாந்த் மருத்துவ குழுவின் தொடர் கண்காணிப்பில் மூலமாக அனைத்து கதிரியக்க பரிசோதனைகளிலும் அவரின் உடல்நிலை நன்றாக இருப்பதால், அவர் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட வீடு திரும்பியுள்ளார்.