Categories
தேசிய செய்திகள்

உடல்நலக் குறைவை காரணம் காட்டி பேரறிவாளனுக்கு ஜாமின் ….!!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக அவருக்கு பரோல் வழங்குமாறு அவரது தாய் கடந்த மே மாதம் முதல்வர் ஸ்டாலின் இன்று மனு அனுப்பினார். அதனை பரிசீலித்த முதல்வர், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி கடந்த ஆண்டு மே இருபத்தி எட்டாம் தேதி பேரறிவாளன் பரோலில் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து அவரது பருவகாலம் நீட்டிக்கப்பட்டு இறுதியாக கடந்த ஜனவரி மாதம் 24-ஆம் தேதி ஒன்பதாவது முறையாக பரோல்  நீட்டிக்கப்பட்டு தற்போது பிணையில் வெளியில் உள்ளார். இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது. அந்த வழக்கு விசாரணையில் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

பேரறிவாளனுக்கு பிணை வழங்கிய உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையின் போது,ஏற்கனவே 32 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்ட பேரறிவாளன் தற்போது உடல் நலக்குறைவால் பரோலில் இருக்கிறார். மேலும் தாமதம் செய்வது எப்படி என கேள்வி எழுப்பியது. ஆயுள் தண்டனை என்றால் ஆயுள் முழுக்க சிறையில் இருக்க வேண்டும் என்பதுதான் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பேரறிவாளன் உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி ஜாமீன் வழங்குவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

Categories

Tech |