நமது உடலில் புதிய ரத்தம் உருவாவதற்கு தேவையான சத்துக்கள் என்னெவென்று அறிந்து கொள்ளுங்கள்…ஹிமோகுளோபின் அதிகரிக்க 10 உணவுகள்.. அந்த சத்துக்கள் உடலில் சேர தவிர்க்கவேண்டிய உணவுகள்..!
இப்பொழுது நிறைய பேர் சந்திக்கக்கூடிய ஒன்று ரத்த சோகை. (அனீமியா) என்று சொல்லக்கூடிய ரத்தசோகை. ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் கூட மிக முக்கியமான காரணம் என்னவென்றால் ஊட்டச்சத்து குறைபாடுதான் அதாவது புதிய சிவப்பணுக்கள் உடலில் உருவாவதற்கு தேவையான சத்துக்கள் உடலில் பற்றாக்குறையாக இருப்பதுதான் இதற்கு காரணம்.
இரும்புச்சத்து , விட்டமின் சி, போலிக் அமிலம், வைட்டமின் பி12, புரதம் இந்த 5 சத்துக்களும் ஒன்றாக சேர்ந்து தான் உடலில் புதிய ரத்தம் உருவாகும். இந்த சத்துக்கள் தான் உடலில் புதிய ரத்தம் உருவாவதற்கு தேவையான அடிப்படை ஆகும்.
இந்த சத்துக்கள் அடங்கிய உணவுகளை நாம் தேர்ந்தெடுத்து சாப்பிடும் பொழுது உடலில் புதிய ரத்தம் உருவாகும். இதன் மூலமாக உடலில் ரத்த அளவுகளும் சீராகவே இருக்கும். ரத்த சோகையும் குணமாகும்.
உடலில் புதிய இரத்தம் உருவாவதற்கு சாப்பிட வேண்டிய 10 சிறந்த உறவு உணவுகள் என்ன என்று பார்ப்போம்….
1. கருப்பு திராட்சை:
கருப்பு திராட்சையில் அதிகப்படியான இரும்புச் சத்தும், பொட்டாசியமும் அடங்கியிருக்கும். இது உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு கையளவு கருப்பு திராட்சையை முதல் நாள் இரவில் நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த திராட்சையும், திராட்சை ஊறிய நீர் ஊற்றி மிக்ஸியில் போட்டு அரைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும்.இந்த கருப்பு திராட்சையை தொடர்ந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தம் வேகமாக அதிகரிக்கும்.
2. மாதுளை ஜூஸ் பழங்கள்:
அதிகளவில் இரும்புச்சத்து இருக்கிறது இந்த பழங்களில். அது மட்டுமில்லாமல் ஏராளமான விட்டமின் மற்றும் மினரல்களும் அடங்கியிருக்கும் மாதுளை என்றதுமே சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய சீட்லெஸ் மாதுளை வாங்கி சாப்பிடக்கூடாது. நாட்டு மாதுளை அதாவது விதையுள்ள தடித்த மாதுளை தான் சாப்பிட வேண்டும். இந்த மாதுளையை அப்டியேவும் சாப்பிடலாம் அல்லது ஜூஸாக அரைத்து சாப்பிடலாம். தினமும் ஒரு மாதுளை சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது.
3. பீட்ரூட் ஜூஸ்:
காய்கறி வகைகளில் பீட்ரூட்டில் அதிக இரும்புச்சத்து இருப்பதால் பீட்ரூட்டை மதிய உணவுகளில் பொரியலாகவோ, அல்லது ஜூஸாக எடுத்துக் கொள்ளலாம்.
4.மட்டன் மற்றும் ஆட்டு ஈரல்:
இதில் அதிகப்படியான இரும்புச்சத்து, புரதம் மற்றும் விட்டமின் பி, உள்ளடங்கி இருக்கும். இந்த மூன்று சத்துக்களும் அடங்கிய ஒரே உணவு இந்த ஈரல் மட்டும்தான். அசைவம் சாப்பிடுபவர்கள் தினமும் தவறாமல் ஒரு 50 கிராம் ஈரல் மதிய உணவுகளில் இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்ளுங்கள், மிகவும் நல்லது.
5. கீரை வகைகள்:
எல்லா வகைக் கீரைகளும் சாப்பிட்டு வரலாம். அதிகம் குறிப்பாக முருங்கைக் கீரையில் தான் அதிக அளவு இரும்புச்சத்து இருக்கிறது. இரத்தம் வேகமாக ஊற வேண்டும் என்று நினைப்பவர்கள் முருங்கைகீரையை சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது. முருங்கை கீரை சாப்பிட பிடிக்காதவர்கள் முருங்கைக்காயை பொரியலாகச் செய்து சாப்பிட்டு வரலாம். இதுவும் இரத்தம் ஊறுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
6.சிட்ரஸ் பழங்கள்:
சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு போன்ற பழங்கள் சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது. இந்த சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. விட்டமின் சி நாம் சாப்பிட்ட உணவுகளில் இருக்கக்கூடிய இரும்புச் சத்துக்கள் அனைத்தும் உடல் உறிஞ்சுவதற்கு உதவியாகவே இருக்கக்கூடிய சத்து விட்டமின் சி.
இரும்புச்சத்துள்ள உணவுகளை எடுக்கும் பொழுது கண்டிப்பாக விட்டமின் சி எடுத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இரும்புச்சத்து உடலில் முழுமையாக போய் சேரும். தினமும் இந்த பழங்களை சாப்பிட்டு வரலாம், அல்லது ஜூஸ் குடித்து வரலாம். விட்டமின் சி நெல்லிக்காவில் இருக்கும். அம்லா ஜூஸ் போட்டும் நீங்கள் தினமும் குடித்து வரலாம்.
7. பேரிச்சம்பழம்:
அதிகப்படியான பொட்டாசியம் இரும்புச் சத்தும் அடங்கி இருக்கும். இதுதவிர ஏராளமான விட்டமின் மற்றும் மினரல்களும் அடங்கியிருக்கும். உடலுக்கு உடனடியாக எனர்ஜி கொடுக்கக் கூடிய பலம் இந்த பேரிச்சம் பழம். உடல் சோர்வு அதிகம் இருப்பவர்கள் இந்த பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். பேரீச்சையும் அவ்வப்போது ஸ்னாக்ஸ் நேரத்தில் சாப்பிட்டு வரலாம்.
8. அத்திப்பழம்:
அத்தி பழம் தினமும் அதிகப்படியான இரும்புச்சத்து அடங்கிய ஒரு பழம். இந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வரும் பொழுது உடலுக்கு ரொம்ப நல்லது. தேனில் கலந்து இந்த அத்தி பழத்தை சாப்பிடும் பொழுது நாம் சாப்பிட்ட உணவில் இருக்கக்கூடிய அத்தனை சத்துக்களும் உடலில் ஏறுவதற்கு ரொம்பவே உதவியாகவே இருக்கும்.
9. நாட்டுக்கோழி முட்டை:
முட்டையில் 100% சுத்தமான புரதம் மற்றும் கொழுப்பு அடங்கியிருக்கும். அதுமட்டுமில்லாமல் முட்டையோட மஞ்சள் கருவில் அதிக படியான போலிக் ஆசிட் அடங்கியிருக்கும், இது உடலில் ரத்தம் அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் ஒன்றிலிருந்து 2 முட்டையை தவறாமல் சாப்பிட்டு ரத்தம் உடலில் வேகமாக ஊருவதற்கு உதவியாகவே இருக்கும்.
10. காய்கறி சூப்:
காய்கறி சூப்பில் எல்லா வகை காய்கறிகளை கலந்து சூப் போட்டு குடித்து வரும் போது நம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும். அதுமட்டுமில்லாமல் சாப்பிட்ட உணவுகள் எளிதில் சீரணமாகவும் ரொம்பவே உதவியாக இருக்கும். இந்த சூப் ஆடுகால் சூப் போல விரும்பி சாப்பிடலாம்.
இதுவும் மூட்டு எலும்புகளுக்கு நல்ல வலு கொடுக்கும், வலிமையாக்கும் எலும்புகள் வலிமையாக இருந்தால் மட்டுமே புதிய ரத்தமும் உருவாகும். எலும்புகளில் தான் புதிய ரத்தம் உருவாகும் என்று அனைவருக்குமே தெரியும். எலும்புகளின் ஆரோக்கியம் ரொம்பவே அவசியம். அசைவம் சாப்பிடுபவர்கள் தவறாமல் ஆட்டுக்கால் சூப்பு குடித்து வருவதும் ரொம்பவே நல்லது.
ஹீமோகுளோபின் அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
காபி, டீ குடிக்கக் கூடாது. காபி மற்றும் டீ யில் இருக்கக்கூடிய ரசாயனங்கள் நாம் சாப்பிட்ட உணவுகளில் இருக்கக்கூடிய இரும்புச்சத்து உடலில் போய் சேர்வதற்கு தடையாக இருக்கும்.
அதேமாதிரி மதுபானங்கள், போதை பொருட்கள் எடுக்கவே கூடாது. அதுமட்டுமில்லை கூல் டிரிங்க்ஸ் குடிக்க கூடாது, அதே போல எவ்வளவு சாப்பிட்டாலும் ஒரு சில பேருக்கு ரத்தம் வேகமாக அதிகரிக்கவே செய்யாது. ஏன் என்றால் சாப்பிட்ட உணவில் இருக்கக்கூடிய சத்துக்கள் உடலில் சேரவில்லை என்பதுதான் அர்த்தம்.
அதற்கு காரணம் கண்டிப்பாக வயிற்றில் கழிவுகள் அதிகமாக இருக்கும் என்று அர்த்தம். அந்த கழிவுகளை வெளியேற்றுவதற்கு நாம் என்ன சாப்பிடவேண்டும் திரிபலாசூரணம் தினமும் சாப்பிட்டு வரவேண்டும்.
திரிபலா சூரணம் என்னவென்றே நிறைய பேருக்கு தெரிவதில்லை, அது நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் இந்த மூன்றும் சேர்ந்தது தான் திரிபலா சூரணம். இந்த பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதில் அரை ஸ்பூன் பொடியை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து இரவு உணவுக்கு பிறகு அரை மணி நேரம் கழித்து குடித்து வர வேண்டும்.
இரவில் தினமும் இதை பருகி வாருங்கள், காலையில் மலம் எளிதாக வெளியேறிவிடும். இதனால் வயிற்றில் இருக்கக்கூடிய கழிவுகளும் நீங்கி சுத்தமாக இருக்கும். சாப்பிட்ட உணவில் இருக்கக்கூடிய சத்துக்கள் அனைத்தும் உடலில் போய் சேர்வதற்கும் ரொம்பவே உதவியாக இருக்கும்.