பசி இல்லாமல் சாப்பிடுவது, சாப்பிட்டே தீர வேண்டும் என்று சாப்பிடுவது, தாகம் இல்லாமல் தண்ணீர் குடிப்பது போன்ற செயல்களைச் செய்வதனால் உடலில் நச்சு கூடும் என்கிறார்கள்.
உடலில் இருக்கக்கூடிய நச்சை வெளியேற்றவேண்டும் என்றால் அடுத்த வேளை பசி வரவரைக்கும் சாப்பிடாமல் இருக்கவேண்டும். மாதத்தில் மூன்று தினங்களில் இதை கடைப்பிடித்தாலே மலம், சிறுநீர், வியர்வைகளின் வாயிலாக நச்சு வெளியேற வாய்ப்பிருக்கிறது என்கிறார்.
மேலும், உளுந்து, உருளைக்கிழங்கு, தயிர், கத்தரிக்காய், காலிப்பிளவர் போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும். ஏனென்றால், உடலில் அதிகமான பிரச்னை செரிமானத்தால் வரக்கூடியது. இந்த மாதிரியான உணவுகள் செரிமானத்தைத் தொந்தரவு செய்யும். இதைத் தவிர்த்தால் எளிதாகச் செரிமானம் நடைபெறும் என்கிறார்.
வெங்காயத்தை நறுக்கி வீட்டின் மூலைப் பகுதிகளில் வைத்தால் அது நோய் எதிர்ப்புத் தன்மை அதிகம் கொண்டது என்பதால் தேவையில்லாத பாக்டீரியாக்களை எடுத்துவிடும். அதனால்தான் நறுக்கி அதிகம் நேரமான வெங்காயத்தை உபயோகப்படுத்தவேண்டாம் என்று சொல்கிறோம். மனிதனின் உடலுக்குள் சென்றவுடன் தேவையில்லாத பாக்டீரியாக்களை வெளியில் எடுக்கக்கூடிய தன்மை வெங்காயத்திற்கு இருக்கிறது. பெரிய வெங்காயத்தைச் சாப்பிடுவதை விடச் சின்ன வெங்காயத்தைச் சாப்பிட்டால் நன்மை அதிகம் இருக்கிறது. சின்ன வெங்காயம் ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் என்றார்.