முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடற்பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தேர்தல் நேரத்தில் கூட பிரச்சாரங்களுக்கு இடையே சைக்கிளிங் செய்வதையும், உடற்பயிற்சி மேற்கொள்வது வழக்கமாக வைத்திருந்தார். இது சம்பந்தப்பட்ட வீடியோக்கள் அவ்வபோது வெளியாகி வைரலானது. தேர்தல் பிரச்சாரத்தில் கூட பல கிராமங்களுக்கு நடைப்பயிற்சி சென்று மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். தற்போது முதல்வரான பிறகும்கூட எவ்வளவு வேலைகள் இருந்தாலும் காலை மாலை என்று இரு நேரம் உடற்பயிற்சி செய்கிறார்.
இன்றைய உடற்பயிற்சி தொல்காப்பியப் பூங்காவில்…
நாம் ஒவ்வொருவரும் நமது பணியில் செலுத்தும் கவனத்தில் சிறு அளவேனும் நம் உடல்நலத்தைப் பேணுவதிலும் செலுத்தவேண்டும்.
சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்ட முடியும்!
உடல்நலனும் உள்ளநலனும்தான் உண்மையான செல்வங்கள்!#MASKUpTN pic.twitter.com/UZIo5EHAQg
— M.K.Stalin (@mkstalin) July 31, 2021
தனது வீட்டில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளர் ஒருவர் வழிகாட்டுதலின்படி உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தொல்லியல் பூங்காவில் தான் உடற்பயிற்சி செய்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “நாம் ஒவ்வொருவரும் நமது பணியில் செலுத்தும் கவனத்தில் சிறு அளவேனும் நம் உடல் நலத்தை பேணுவதிலும் செலுத்த வேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்ட முடியும். உடல் நலனும் உள்ளநலனும் தான் உண்மையான செல்வங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.