Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

உடற்பயிற்சி செய்த வாலிபர்…. முன் விரோதத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

முன் விரோதத்தால் வாலிபரை இரும்பு ராடால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தென்காசியை சேர்ந்த புகழேந்தி(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது காந்திபுரம் ஜே.என் ரோடு பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு புகழேந்தியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

மேலும் தினேஷ் இரும்பு ராடால் புகழேந்தியை குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த புகழேந்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தினேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |