ஐநா பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரெஸ் வரும் 26-ஆம் தேதி ரஷ்யா செல்ல இருக்கிறார்.
உக்ரைன் மீது ரஷியாவின் போர் தொடர்ந்து 59-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். இதற்கிடையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள்முயற்சிசெய்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்து வருகின்றன.
இந்நிலையில், ஐநா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வரும் 26-ம் தேதி ரஷியா செல்ல இருக்கிறார். மேலும் ரஷிய அதிபர் புதின் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி சர்ஜி லவ்ரோவை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது உக்ரைனில் நடைபெற்று வரும் போரை உடனடியாக நிறுத்தும்படி ரஷிய அதிபர் புதினிடம் ஐநா பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுப்பார் என கூறப்பட்டுள்ளது.