Categories
அரசியல் மாநில செய்திகள்

உடனே தடை போடுங்க…! தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும்….. வைகோ பரபரப்பு

தி ஃபேமிலி மேன் 2 ஹிந்தி தொடரை ஒளிபரப்ப தடை விதிக்குமாறு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ வலியுறுத்தி உள்ளார்.

ஃபேமிலி மேன் இணைய தொடரின் இரண்டாம் பாகம் தமிழர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஃபேமிலி மேன் 2 அகைன்ஸ்ட்டு தமிழ்ஸ் என்கிற ஹேர்ஸ் டேக்கில் இந்த இணைய தொடருக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த சமந்தா தமிழர்களுக்கு எதிரான இந்த தொடரில் நடித்து இருக்கக் கூடாது எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த தொடரை ரத்து செய்யக்கோரி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழ் ஈழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை நீத்த ஈழ போராளிகளையும் கொச்சைப்படுத்தி இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.

ராணுவ சீருடை அணிந்த சமந்தா என்ற தமிழ் பெண் பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக காட்சிகள் உள்ளதாகவும், இந்த தொடர் தமிழ் பண்பாட்டுக்கு எதிரானது எனவும் சாடியுள்ளார். இந்த தொடரை ஒளிபரப்பினால் தமிழகத்தில் போராட்டங்கள் வெடிக்கும் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் வைகோ கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |