Categories
மாநில செய்திகள்

உடனே உங்க அக்கவுண்ட்டை ‘க்ளோஸ்’ பண்ணுங்க…. பள்ளி மாணவிகளுக்கு அதிரடி உத்தரவு….!!!

பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் சமூக வலைதள கணக்குகளை உடனடியாக க்ளோஸ் செய்ய வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாணவ மாணவிகள் மத்தியில் ஸ்மார்ட்போன் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதுவும் லாக்டவுன் காலத்தில் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்புகள் எடுக்க ஆரம்பித்த பிறகு ஸ்மார்ட்போன் வைத்துள்ள பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையும் அவர்கள் பெரும்பாலான நேரங்கள் செல்போனின் மூழ்கியிருப்பது அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கல்வி சார்ந்த தேடல்களுக்காக கூகுளில் நுழையும் மாணவர்களின் கவனம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூடியூப் என பல சமூக வலைத்தளங்கள் பக்கம் திருப்பி அவர்களை அதில் மூழ்கி விட செய்கின்றது.

இதன் விளைவாக மாணவர்கள் பாதிப்பதுடன், சமூக வலைத்தளம் மூலம் ஏற்படும் புதிய தொடர்புகளால் வாழ்க்கையும் சீரழிந்து விடுகின்றது. இதையெல்லாம் கருத்தில்கொண்டு. திருப்பூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக ஒரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 18 வயதுக்குட்பட்ட மாணவியர் யாரும் புதிய கணக்கு துவங்க கூடாது. ஏற்கனவே கணக்கைத் துவங்கி இருப்பவர்கள் அதிலிருந்து உடனே வெளியே விட வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதில் முக்கிய அம்சமாக மாணவ மாணவியர்கள் சமூக வலைதளங்களில் தங்களது படங்களை பதிவிட கூடாது என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |