Categories
மாநில செய்திகள்

உடனே இதை செய்யுங்க…. சி.விஜயபாஸ்கர் முக்கிய வேண்டுகோள்…!!!!

தமிழகத்தில் கொரோனா பிரச்சினை இன்னும் ஓயாத நிலையில் ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் ஒமைக்ரான் நுழைந்துள்ளது. இந்த நிலையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் கண்காணிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி பூஸ்டர் டோஸ் செலுத்த திட்டமிடுதல் ஆகியவற்றை விரைவு படுத்துமாறு மத்திய மற்றும் மாநில சுகாதாரத் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |