Categories
மாநில செய்திகள்

உடனே இணைக்கவும்: 2 நாள் மட்டுமே டைம்…! தமிழக மக்களுக்கு அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது.

இந்நிலையில்  ஆதார் இணைப்புக்கு பிறகே மின் கட்டணம் வசூலிப்பதற்கு மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதனால், கட்டணம் செலுத்துவதில் உள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, நுகர்வோருக்கு 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவ.24 -30ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்துவோருக்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. எ.கா: நவ.28 மின் கட்டணம் செலுத்த இறுதி நாள் என்றால், அவருக்கு நவ.30 வரை அவகாசம்.

Categories

Tech |