நேற்று புதுவை துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்ற தமிழிசை, புதுச்சேரி மக்களுக்கு நேற்றைய தினம் வந்ததிலிருந்து அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு, புதுச்சேரி மக்களுக்கு எந்த வகையில் ஒரு துணை நிலை ஆளுநராக செயலாற்ற முடியும் என்பதை முதல் நாள் இரவு அதிக நேரம் உட்கார்ந்து நான் ஆலோசனை செய்தேன். முதல் முதலில் நான் பெருமையாக இங்கே கருதுவது, நம்நாட்டிலேயே தயாரித்த தடுப்பூசியை நம் நாட்டு மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இதற்கு நம் நாட்டு விஞ்ஞானிகளும், நம்மை ஊக்கப் படுத்திய மத்திய – மாநில அரசுகளுக்கும் நான் எனது வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் தடுப்பூசி எடுத்துக் கொள்வது மிகக் குறைவாக இருக்கிறது என்ற செய்தி எனக்கு மிகுந்த மன வருத்தத்தை தருகிறது. 25 நாடுகள் நமது தடுப்பூசியை எதிர்நோக்கி காத்து இருக்கின்ற காலகட்டத்தில்,
நம் நாட்டில் தயாரித்த தடுப்பூசியை நாமே எடுத்துக்கொள்வதற்கு தயக்கம் காண்பிக்க கூடாது என்ற காரணத்தினால், இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் முதல் நிகழ்ச்சியாக கொரோனா தடுப்பூசி நடக்கும் இடத்திற்கு சென்று, அங்கே மக்களை ஊக்கப் படுத்தலாம் என்று இருக்கிறேன். எனக்கு கொரோனா இல்லை. ஏன் நாம் தடுப்பூசி போட வேண்டும் ? என்று தயவு செய்து யாரும் நினைக்க வேண்டாம்.
போலியோ இன்னைக்கு நாட்டுல இல்லை, ஆனால் போலியோ சொட்டு மருந்து கொடுத்து கொண்டு இருக்கிறோம். ஏனென்றால் இந்த வைரஸ் திடீரென்று தான் உருமாறும், பெருக்கெடுக்கும். இதே போல நாம் தடுப்பூசி செலுத்தி தாக்கினால்தான் மறுபடி வராது. இன்னும் பல நாடுகளில் வீட்டிற்குள்ளே இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
இன்னும் பல நாடுகளில் மிக முக்கிய பதவிகளில் வருபவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதனால் தான் எல்லாரையும் கூட மஸ்க் அணிந்து கொள்ளுங்கள், கைகளை கழுவுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். எல்லாரும் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற முதல் வேண்டுகோளையும் நான் வைக்கிறேன்.