Categories
தேசிய செய்திகள்

உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும்…. அதிரடியாக உத்தரவிட்ட ஐகோர்ட்….!!!!

உடனடியாக  அரசு இல்லத்தை  காலி செய்ய வேண்டும் என  ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பா.ஜ.க.  மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி கடந்த 2016-ஆம் ஆண்டு மாநிலங்களவையில் எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டார். இதனால்  இவருக்கு அரசு இல்லம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமியின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதத்தில் நிறைவடைந்தது.

ஆனால் அவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக 6  மாதம் அரசு இல்லத்தில்  தங்க அனுமதிக்கு வேண்டும் என கூறி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை  விசாரித்த நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா அரசு இல்லத்தை 6 வாரத்திற்குள் காலி செய்ய வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |